இடியாப்பம்

இடியாப்பம்

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்

தண்ணீர் - 3 டம்ளர்

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை: வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். அந்த சுடு நீரை கோதுமை மாவில் ஊற்றி பிசைந்து கொள்ளவும். அதனுடன் உப்பும் சேர்த்துக்கொள்ளவும். பிசையும் போது கோதுமை மாவு கையில் ஒட்டக்கூடாது. அதுதான் சரியான பதம். இடியாப்ப தட்டில் எண்ணெய் தடவி அதனுள் பிசைந்துவைத்த மாவை போட்டு இடியாப்பமாக பிழிந்து கொள்ளவும். பிழிந்த இடியாப்பத்தை இட்லி தட்டில் போட்டு வேகவைத்து இறக்கவும். ருசியான கோதுமை இடியாப்பம் ரெடி.

No comments:

Post a comment