ரவா பூரி பாயசம்

ரவா பூரி பாயசம்

தேவையானவை:

பால் - 2 கப்

சர்க்கரை - தேவைக்கு

கண்டன்ஸ்ட் மில்க் - 100 கிராம்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

ரவை - கால் கப்

மைதா - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - சிறிதளவு

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

ரவையுடன் மைதா, நெய், தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் அதனை அரை மணி நேரம் ஊற வைத்து மீண்டும் பிசைந்து பூரி களாக தேய்த்து எண்ணெய்யில் பொரித் தெடுக்கவும். பின்னர் பூரிகளை சிறிய துண்டு களாக நறுக்கிக்கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி அதனுடன் கண்டன்ஸ்ட் மில்க், சர்க்கரை சேர்த்து கால் மணி நேரம் கிளறி விடவும். பின்னர் இறக்கி அதில் பூரி துண்டுகள், ஏலக்காய் தூள் சேர்த்து பருகலாம்.

No comments:

Post a comment