ரவை புட்டு

ரவை புட்டு

தேவையானவை:

கோதுமை ரவை - 2 கப்

வாழைப்பழம் - 2

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

தேங்காய்த் துருவல் - 1 கப்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

வெறும் வாணலியில் கோதுமை ரவையை கொட்டி பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பின்னர் கோதுமை ரவையை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுடன் சுடுநீரை ஊற்றி புட்டு மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். புட்டுக் குழலில் கொஞ்சம் தேங்காய் துருவலை போட்டு அதனுள் மாவை போட்டு மீண்டும் தேங்காய் துருவலை போட்டு 10 நிமிடங்கள் வேகவைக்கவும். வெந்ததும் அதன் மேல் நாட்டு சர்க்கரை, வாழைப்பழத்தை போட்டு பிசைந்து ருசிக்கலாம்.

No comments:

Post a comment