வெல்ல தோசை

வெல்ல தோசை

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்

அரிசி மாவு - அரை கப்

பொடித்த வெல்லம் - அரை கப்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கப் தண்ணீரில் வெல்லத்தை கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், உப்பு ஆகியவற்றை கலந்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். சிறு தீயில் தவாவை வைத்து எண்ணெய் தடவி மாவை ஊற்றி தோசையாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, நன்றாக வெந்ததும் தோசையை திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

No comments:

Post a comment