சாம்பார்

தேவையானவை:

துவரம் பருப்பு - ஒரு கப்

குடைமிளகாய் - 2 (நறுக்கவும்)

பெ.வெங்காயம் - 1 (நறுக்கவும்)

தக்காளி - 2 (நறுக்கவும்)

சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

மிளகு தூள் - கால் டீஸ்பூன்

பெருங்காய தூள் - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

கடுகு - சிறிதளவு

வெந்தயம் - அரை டீஸ்பூன்

சீரகம் - அரைடீஸ்பூன்

மிளகு - கால் டீஸ்பூன்

பூண்டு - 3 பல்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: குக்கரில் பருப்பை போட்டு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும். பின்னர் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

ஓரளவு வதங்கியதும் குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் மிளகுதூள், சாம்பார் பொடி சேர்த்து கிளறவும். பின்னர் வேகவைத்த பருப்பை கொட்டி போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். சற்று கெட்டியாகி சாம்பார் பதத்துக்கு வந்ததும் பெருங்காயத்தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். ருசியான குடைமிளகாய் சாம்பார் ரெடி.

1 comment: