வேர்க்கடலை பொரியல்

தேவையானவை:

குடைமிளகாய் 3 (நறுக்கவும்)

பெ.வெங்காயம் 1 (நறுக்கவும்)

பச்சை வேர்க்கடலை கால் கப்

தேங்காய் துருவல் கால் கப்

கடுகு, உளுத்தம்பருப்பு சிறிதளவு

காய்ந்த மிளகாய் 3

கொத்தமல்லி தழை சிறிதளவு

உப்பு தேவைக்கு

செய்முறை: வாணலியில் பச்சை வேர்க்கடலையை கொட்டி பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் போட்டு தாளிக்கவும்.

பின்னர் வெங்காயத்தை கொட்டி வதக்கிக்கொள்ளவும். நன்கு வதங்கியதும் குடைமிளகாயை கொட்டி ஐந்து நிமிடங்கள் வதக்கவும். அது வதங்கியதும் உப்பு, வேர்க்கடலை, தேங்காய் துருவலை கொஞ்சம் கொஞ்சமாக தூவி நன்றாக கிளறி இறக்கவும். அதனுடன் கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.

No comments:

Post a comment