வெண்டைக்காய் தோசை

தேவையானவை:

புழுங்கல் அரிசி - ஒன்றரை கப்

காய்ந்த மிளகாய் - 3

பெ.வெங்காயம் - 1 (நறுக்கவும்)

கேரட் - 1 (துருவவும்)

வெண்டைக்காய் - 100 கிராம்

கடுகு, சீரகம் - ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு தழை

செய்முறை:

அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிருதுவாக அரைக்கவும். ஓரளவு அரைபட்டதும் வெண்டைக்காயை சேர்த்து நைசாக அரைத்து புளிக்க வைக்கவும். மாவு புளித்ததும் கடுகு சீரகத்தை தாளித்து அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவிக்கொள்ளவும். அது சூடானதும் மாவை ஊற்றவும். அதனுடன் வெங்காயம், கேரட், கொத்தமல்லி தழையை தூவி தோசைகளாக சுட்டெடுக்கவும்.