குடைமிளகாய் தோசை

தேவையானவை:

தோசை மாவு - 2 கப்

மஞ்சள் குடைமிளகாய் - 2 (நறுக்கவும்)

பச்சை குடைமிளகாய் - 2 (நறுக்கவும்)

சிவப்பு குடைமிளகாய் - 2 (நறுக்கவும்)

பச்சைப் பட்டாணி - 1 கப்

துருவிய - கால் கப் பாலாடைக்கட்டி

பெ.வெங்காயம் - 4 (நறுக்கவும்)

கொத்தமல்லி - சிறிதளவு தழை

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை மாவை சற்று கனமாக ஊற்றவும். அதன் மீது குடைமிளகாய் வகைகள், வெங்காயம், கொத்தமல்லி தழை, பாலாடைக்கட்டி ஆகியவற்றை பரவலாக தூவவும். தோசையை சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு பக்கம் நன்றாக வெந்தாலே போதுமானது. அதை அப்படியே எடுத்து பரிமாறலாம்.