காலிபிளவர் மசாலா தோசை

தேவையானவை:

தோசை மாவு - 3 கப்

தனியாத்தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன் விழுது

காலிபிளவர் - 1 (நறுக்கிக் கொள்ளவும்)

பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)

தக்காளி - 2 (நறுக்கவும்)

மஞ்சள்தூள் - சிறிதளவு

மிளகாய்த்தூள் - தேவைக்கு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி வதக்கவும். அது நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து கிளறவும். பின்னர் தக்காளியை கொட்டி வதக்கவும். தக்காளி வதங்கியதும் காலிபிளவரை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பின்பு அதனுடன் மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும். மசாலா வாசம் நீங்கியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அனைத்தையும் வேகவைத்து இறக்கவும். தோசையை சுட்டெடுத்து, மசாலாவை உள்ளே வைத்து பரிமாறலாம்.