மில்க் பேடா

தேவையானவை:

கெட்டியான பால் - கால் லிட்டர்

பால் பவுடர் - 1 கப்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

ஜாதிக்காய் தூள் - சிறிதளவு

குங்குமப் பூ - சிறிதளவு

செய்முறை:

கடாயில் நெய் ஊற்றி அது உருகியதும் பால் மற்றும் பால் பவுடரை சேர்த்து கிளறவும். அடிப்பகுதியில் பிடிக்காத அளவுக்கு 3 நிமிடங்கள் கிளறிக்கொண்டிருக்கவும். பின்னர் அதனுடன் ஏலக்காய்தூள், ஜாதிக்காய் தூள் சேர்த்து கிளறவும். கடாயின் பக்கவாட்டு பகுதிகள் ஒட்டாத பதம் அளவுக்கு வரும் வரை கிளறி இறக்கவும். ஆறியவுடன் குங்குமப்பூவை சேர்த்து பந்து வடிவத்தில் உருட்டவும். பின்னர் பேடா வடிவத்திற்கு சிறு வட்டமாக தட்டி நடுப்பகுதியில் பெருவிரலை அழுத்தவும். சுவையான மில்க் பேடா ரெடி.

No comments:

Post a comment