சாமை அதிரசம்

தேவையானவை:

சாமை அரிசி - 2 கப்

துருவிய வெல்லம் - 2 கப்

ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

சாமை அரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, வடிகட்டி நிழலில் உலர்த்தவும். ஓரளவு ஈரப்பதம் நீங்கியதும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சிக்கொள்ளவும். பின்னர் அதனுடன் சாமை மாவை சிறிது சிறிதாக கொட்டி கிளறி விடவும். அதனுடன் ஏலக்காய்தூள் சேர்த்து இறக்கி மாவு கலவையை ஓரிரு நாட்கள் புளிக்க வைக்கவும். பின்னர் அதிரசமாக தட்டி, கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

No comments:

Post a comment