மால்புவா

தேவையானவை:

மைதா - 1 கப்

கோதுமை மாவு - 1 கப்

ரவை - 1 கப்

துருவிய பன்னீர் - 1/2 கப்

சர்க்கரை - 1 கப்

தண்ணீர் - 1 கப்

எண்ணெய் - தேவைக்கு

சிறுபருப்பு - அரைடீஸ்பூன்

பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு பாகு காய்ச்சிக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பெருஞ்சீரகம், ஏலக்காய் தூள், பன்னீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனுடன் சர்க்கரை பாகுவை ஊற்றி கட்டிப்பிடிக்காமல் கரைத்துக்கொள்ளவும். பின்னர் மாவு கலவையை 5 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். மாவு கலவையை அதிரசம் பதத்துக்கு தட்டி கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். அதன் மீது சிறு பருப்பை வறுத்து தூவி பரிமாறலாம். ருசியான மால்புவா ரெடி.

No comments:

Post a comment