ஆப்பிள் பர்பி

தேவையானவை:

ஆப்பிள் - 2 (துருவவும்)

தேங்காய் துருவல் - 2 கப்

சர்க்கரை - தேவைக்கு

நறுக்கிய பிஸ்தா - 10

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - சிறிதளவு

செய்முறை:

வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் ஆப்பிள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கிளறிக்கொள்ளவும். பின்னர் சர்க்கரையை தூவி கிளறிவிடவும். பர்பி பதத்துக்கு வந்ததும் இறக்கவும். அகன்ற தட்டில் நெய் தடவி அதில் பர்பி கலவையை கொட்டி பரப்பவும். அதில் பிஸ்தாவை தூவி சிறு துண்டுகளாக்கியோ, ஆப்பிள் வடிவத்திலோ வடிவமைத்து ருசிக்கலாம்.

No comments:

Post a comment