ரவா அப்பம்

தேவையானவை:

மைதா - அரை கப்

ரவை - கால் கப்

பொடித்த வெல்லம் - அரை கப்

வாழைப்பழம் - 1

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

ஆப்ப சோடா - சிறிதளவு

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் கப்

செய்முறை:

மைதாவுடன் ரவை, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவலை சேர்த்து கிளறிக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும். பின்னர் பாகுவை வடிகட்டி அதனுடன் மைதா மாவு கலவையை சேர்த்து கிளறவும்.

வாழைப் பழத்தையும் அதனுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இட்லி மாவு பதத்துக்கு வந்தவுடன் ஆப்ப சோடாவை கலந்து கொள்ளவும். பணியார கல்லில் நெய்தடவி மாவை ஊற்றி அப்பங்களாக சுட்டெடுக்கவும்.

No comments:

Post a comment