தக்காளி தோசை

தேவையானவை:

பச்சரிசி - 1 கப்

புழுங்கல் அரிசி - 1/2 கப்

உளுந்து - கால் கப்

பெ.வெங்காயம் - 2

காய்ந்த மிளகாய் - 5

தக்காளி - 5 (நறுக்கவும்)

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி வகைகளுடன் உளுந்தை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து மாவாக அரைத்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை கொட்டி நன்றாக வதக்கிக்கொள்ளவும். அவை ஆறியதும் மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து அதனை மாவில் சேர்த்து கிளறவும். தோசை மாவு பதத்துக்கு வந்ததும் உப்பு சேர்த்துக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் எண்ணெய் தடவி தோசைகளாக சுட்டெடுக்கவும்.