வெந்தய சுண்டல்


தேவையானவை:

முளைகட்டிய வெந்தயம் -1 கப்

காய்ந்த மிளகாய் - 3

பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி அளவு

எண்ணெய், உப்பு - தேவைக்கு

கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

முளைகட்டிய வெந்தயத்தை இட்லி தட்டில் வேக வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெந்தயம், உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் வெல்லம், தேங்காய் துருவல் தூவி லேசாக கிளறி இறக்கி ருசிக்கவும்.