உலர் பழவகை சுண்டல்


தேவையானவை:

முளைகட்டிய பச்சைப் பயறு - 1 கப்

பாதாம் -10 (துருவவும்)

பிஸ்தா - 10 (துருவவும்)

முந்திரி - 10 (துருவவும்)

பேரீட்சை பழம் - 10 (நறுக்கவும்)

உலர் திராட்சை - ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முளைகட்டிய பயறுடன் சிறிதளவு உப்பு கலந்து இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும். அதனுடன் பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீட்சை, உலர் திராட்சை ஆகியவற்றை கொட்டி கிளறவும். பின்னர் தேங்காய் துருவல் தூவி சுவைக்கலாம்.