பட்டர் பீன்ஸ் சுண்டல்


தேவையானவை:

உறித்த பட்டர் பீன்ஸ் - 1 கப்

சோம்பு - கால் டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் கப்

இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

பட்டர் பீன்ஸுடன் உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி துருவலை கொட்டி தாளிக்கவும். அதனுடன் பட்டர் பீன்ஸ், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும். மசாலா வாசம் நீங்கியதும் தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கி ருசிக்கலாம்.