கோதுமை சுண்டல்


தேவையானவை:

முளைகட்டிய கோதுமை - 1 கப்

கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு

சீரகம் - கால் டீஸ்பூன்

இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்)

தக்காளி -2 (நறுக்கவும்)

பெ.வெங்காயம் - 1 (நறுக்கவும்)

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

குக்கரில் முளைகட்டிய கோதுமையை வேக வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை கொட்டி தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி துருவல் ஆகியவற்றை கொட்டி கிளறவும். நன்கு வதங்கியதும் கோதுமை, உப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கவும். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த சுண்டல் ஏற்றது.