மசாலா சாதம்

தேவையானவை:

குடைமிளகாய் - 2 (நறுக்கவும்)

கடுகு, உளுத்தம்பருப்பு -சிறிதளவு

தனியா -2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் -5

சீரகம் -1 டீஸ்பூன்

வேர்க்கடலை பருப்பு -கால் கப்

கறிவேப்பிலை -சிறிதளவு

கரம் மசாலா தூள் -சிறிதளவு

எண்ணெய், உப்பு -தேவையான அளவு

வடித்த சாதம் -5 கப்

செய்முறை: வாணலியை சிறு தீயில் வைத்து அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, தனியா, சீரகம், மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக கொட்டி பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பின்னர் அவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும், அத்துடன் கரம் மசாலா தூளை சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் குடைமிளகாயை கொட்டி வதக்கிக்கொள்ளவும். நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி கலவையை தூவி கிளறவும். பச்சை வாசம் நீங்கியதும் சாதத்தை கொட்டி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். மசாலா சாதம் ரெடி!

No comments:

Post a comment