ஸ்வீட் போளி ரெசிப்பி

ஸ்வீட் போளி ரெசிப்பி
தேவையானவை:
 சீனிக்கிழங்கு - 3
 வெல்லம் - 1 கப்
 துருவியத் தேங்காய் - கால் கப்
 ஏலக்காய் - 1 (பவுடராக்கவும்)
மாவு பிசைய:
 மைதா மாவு - 1 கப்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
 நெய்/எண்ணெய் - கால் கப்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மாவு பிசைவதற்கு கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து போதுமான தண்ணீர் விட்டு பிசையவும். போளி செய்வதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாக மாவைப் பிசைந்துவிட வேண்டும். மாவை மிருதுவாக பிசைந்து 4 மணி நேரம் ஊறவிடவும்.மாவு ஊறிக்கொண்டிருக்கும் நேரத்தில் பூரணத்தை ரெடி செய்துவிடலாம். சீனிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் வைத்து, பிறகு சிறிது தண்ணீர் நிரப்பிய பிரஷர் குக்கரில் சீனிக்கிழங்கு இருக்கும் பாத்திரத்தைத் வைத்து, ஐந்து விசில் வரை விட்டு ஆவியில் வேக விட்டெடுக்கவும். ஆறியதும் கிழங்கின் தோல் நீக்கி மசித்து வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து, வடிகட்டி வைக்கவும். பிறகு அப்படியே கிழங்கில் சேர்த்து, மிதமான தீயில் அடுப்பில் வைத்து வேகவிடவும். இரண்டும் ஒன்றாக கலந்ததும் துருவியத் தேங்காய், ஏலக்காய்த்தூளைச் சேர்த்து எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்வரை கிளறவும். ஒட்டாத பதம் வரும்போது அடுப்பை அணைத்து ஆறவிடவும். பிறகு, விருப்பமான அளவில் உருண்டைகளாகப் பூரணத்தை உருட்டிக்கொள்ளவும். இப்போது பிசைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து நெய் பிரிந்து வெளியே வரும். மீண்டும் மாவைப் பிசைந்து ஒரே மாதிரியான சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை மாவு தொட்டு தேய்த்து, நடுவில் பூரணத்தை வைத்து மூடி, மீண்டும் போளி வடிவத்துக்கு தேய்த்து வைக்கவும். தேய்த்த மாவில் இருந்து எண்ணெய்/நெய் வெளிவர ஆரம்பிக்கும் என்பதால் போளி சுட நெய்/எண்ணெய் தேவையில்லை. ஆனாலும் நெய்/எண்ணெய் வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறிது எண்ணெய்/நெய் சூடான தவாவில் தடவி தீயை மிதமாக்கி போளியை இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். போளியை தோசை கரண்டியால் மெதுவாக அழுத்திவிட்டால் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்.

No comments:

Post a comment