ஏழு கறி கூட்டு
தேவையானவை:
 பாசிப்பருப்பு - கால் கப்
 வாழைக்காய்  - ஒன்றில் பாதி
 மஞ்சள் பூசணிக்காய் - ஒரு சிறு துண்டு
 சர்க்கரை வள்ளிக்கிழங்கு - ஒன்றில் பாதி
 ஃப்ரெஷ்ஷான  மொச்சை - 
கால் கப்
 அவரைக்காய்  - 15
 கருணைக்கிழங்கு - ஒரு சிறிய துண்டு
 சேப்பங்கிழங்கு - 2
 மஞ்சள்தூள்  - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
அரைக்க:
 துருவிய தேங்காய் - அரை கப்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 5
 அரிசி மாவு - கால் டீஸ்பூன்
தாளிக்க:
 எண்ணெய் -  2 டீஸ்பூன்
 கடுகு - 1  டீஸ்பூன்
 கறிவேப்பிலை  - சிறிது
செய்முறை:
அடுப்பில்  குக்கரை வைத்து பாசிப்பருப்பைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விட்டு வேகவிடவும்.  கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றின்  தோலை நீக்கி விடவும். பிறகு, கழுவி சின்ன சின்ன சதுரங்களாக  நறுக்கி வைக்கவும்.  அவரைக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும்.  அடுப்பில் பாத்திரத்தை  வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வேகவிடவும். இத்துடன் மொச்சை, மஞ்சள்தூள்,  உப்பு, தோல் நீக்கி நறுக்கிய வாழைக்காய் மற்றும் மஞ்சள் பூசணியைச்  சேர்த்து காய்களை வேகவிடவும்.அரைக்கக் கொடுத்தவற்றை தண்ணீர் விட்டு மிருதுவாக  அரைத்தெடுக்கவும். காய்கள் வெந்ததும், வெந்த பருப்பு மற்றும் தேங்காய் கலவையைச் சேர்த்து வேகவிடவும்.  பிறகு தாளிக்க வேண்டியதைச் சேர்த்து தாளித்து காய்களில்  கொட்டி கிளறி இறக்கி பரிமாறவும்.

 
No comments:
Post a Comment