கத்தரிக்காய் வற்றல் குழம்பு
தேவையான பொருள்கள்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 15 பல்
கத்தரிக்காய் வற்றல் - 10
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெந்தயம் - கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
மல்லி தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
செய்முறை
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்து கத்தரிக்காய் வற்றல் பூண்டு போட்டு வதக்கி, அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
பின் அதனுடன் அனைத்து தூள்களையும் சேர்த்து வதக்கி புளியை கரைத்து ஊற்றி , தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு கொதித்து எண்ணெய் மிதந்து வந்ததும் இறக்கி பரிமாறவும். சுவைாயன கத்தரிக்காய் வற்றல் குழம்பு ரெடி கத்தரிக்காய் வற்றல் குழம்பு.
No comments:
Post a Comment