சாமை பொங்கல்


சாமை பொங்கல்

தேவையானவை:

 சாமை அரிசி - அரை கப்

 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

 இஞ்சி - அரை இஞ்ச் நீளமுள்ளது

(தட்டி வைக்கவும்)

 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

 தண்ணீர் - 2 கப்

தாளிக்க:

 நெய் - 2 டீஸ்பூன்

 மிளகு - 1 டீஸ்பூன்

 சீரகம் - முக்கால் டீஸ்பூன்

 பச்சை மிளகாய் - 1

 கறிவேப்பிலை - சிறிதளவு

 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 

செய்முறை:

அடுப்பில் சிறிய குக்கரை வைத்து நெய் விட்டு உருகியதும் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இரண்டாக உடைத்த பச்சை மிளகாயைச் சேர்க்கவும். பிறகு இஞ்சி, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, கழுவிய சாமையைச் சேர்த்து கிளறவும். இத்துடன் 2 கப் தண்ணீர் விட்டு சூடானதும் குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் வரை வேகவிட்டு எடுக்கவும். பிரஷர் நீங்கியதும் குக்கரைத் திறந்து கலவையை மசித்துவிட்டு இறக்கி பரிமாறவும்.